Wednesday, July 19, 2017

விதுர நீதி :


விதுர நீதி :

1/369

எளியார் நலிவான் வெளியது நோக்கி
உளியது ஓங்குவார் ஒத்து!

2/369

இயலா தனமுயற்றல் வானவில்லைக் கோடல்
செயலாப் புனைவார் புரட்டு!

3/370

கதிர்பற்றி வெய்யோன்வான் ஓட்டம் தடுக்கவோ?
ஆதியான சோதியும் அற்று!

4/370

இசைந்து செவிமடுப்பார்க் கல்லால் கசிந்து
உரையா திருப்பார் குரு!

5/371

நெறிமையால் ஈட்டல் முறைமை விடுத்து
பெருமை கொளல்என்னோ சால்பு?

6/372

தற்புகழ்ச்சி தாழ்நெறியோர் பால்ஈட்டல் வெல்பகை
பாற்புகழ்ச்சி இத்தனையும் பாழ்!

7/373

நோற்பவை நோலாமை நோற்கலா வாற்றலிவை
மேலாவார்க் கென்றும் இழுக்கு!

8/373

101. பொய்மை புரட்டு பொறையிலார் வீழ்த்தப்போம்
தூய்மை உளராவார் கூட்டு!

9/374

வேட்கை இலாதார்க்கு ஈந்த பெரும்கல்வி
தாட்சியாய் ஆற்ற விலக்கு !

10/375.

தனக்கலாத எஃதும் தவிர்த்தல் நெறியாம்
தனக்காக்கல் புன்மையுள் ஒன்று!

11/378

தீயது கண்டு பொறுமார் பொறைமைதான்
நோயது கொண்டு  முடித்து!

12/378

குலவதுவை ஏசி பலர்முன்னே தாழ்ப்பவர்போய்
பாஞ்சாலிக் கற்றது பெற்று!

13/379

ஈகை மறப்ப தறமன்று துஷ்யந்தன்
ஆகை போலா மது!

14/379

ஐயமும் பிச்சையும் அந்தணர்க் கீதல்வாய்
செய்க தமைதாழ விட்டு!

15/379

காலத்தே ஈகை கடப்பாடு! ஈவதாய்
கோலிய கோடாமை நன்று!  

16/380

அவரவர் தந்தாம் நெறிதனில் நிற்றல்
தவமென போற்றப் படும்!

17/535
தான்தன் உடலம் புலன்கள் பிராணன் 
மேன்தெய்வம் வாய்ப்பச் செயல்.

--தாசாரதி தாஸன்
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .

திருவஞ்சிக்களம் :

திருவஞ்சிக்களம் : இருள்தருமா ஞாலத்து இகலொழித்தல் வேண்டுவயேல் மருளொழித்து மடநெஞ்சே வஞ்சிக் களத்துறையும் அருளாழி வண்ணர் கண்ணன் நம்பெருமான...