Tuesday, May 2, 2017

ராமாநுஜ தசகம் :


ராமாநுஜ தசகம் :

1. பொய்என்றும் சூனியம் மாயையே என்றிவ்வோ 
வாய்மை அலாத சிலர்கூற -- பொய்த்தான்அப் 
பொய்யுரை யாவும் இராமா நுசன்வந்து 
மெய்யுரை செய்வான் மறைக்கு.

2. பாஷ்யகார் எண்மரோடு தானுமாய்,  கோள்கள் 
விஷயமாம் ஆதவன் தன்னொடு -- அஷ்டம 
கோசார வாழ்பலன் போலா, பரமபதம் 
போய்சேர அஷ்டாங்க சித்து.

3. இரவிக் கதிர்இருளைப் நீக்குமிறை யன்பர்
உறவும் அணுக்கமும் சித்தம் -- நெறிபட
நல்குமேல் ராமா நுசனடி சீயாக்கள்
மல்கவொழி யாவோ மருள்?

4. ஜகம்புகழும் ராமா நுசன்மித்யா வாதம் 
ஜகமிதில் நீறுசெய் தோய்த -- ஜகது                                                வாத கொடைவள்ளல் ! முக்திநல் ஞானம்
பொதுவாக்கி வீடுசெய்வான் போந்து !

5. தலைவிதாய் தோழி எனஆழ்வார் செய்த 
அலவல் அதுகண் டிரங்கா -- அலவலன் 
மாலை கடியன் கொடியனென்ன வாளை 
போலை எதிராசர் எற்று?

6. கதிநமக்கு வேறுண்டோ? நன்மதி பெற்ற
யதிபதி ராமா நுசன்செய் -- விதியிங்கு 
அந்தரத்து வைகுந்தம் பைய தரைக்கிழிய 
தந்தாமத் தென்செயமா லுக்கு?

7. உய்ய ஒருவழி நம்முடைய வர்துய்ய 
செய்ய திருவடி! ஐயநீர் -- பொய்யா 
பிடிக்கிலும் மெய்யா உதவிடும்! மாயோன் 
கடைக்கண் செய்யா படிறு.

8. கண்ணன் வழிகீதை! ஆழ்வார் அவர்மொழி
பண்ணார் தமிழ்பாடல் ஆயிரமும் -- அண்ணல்
இராமா நுசமுனி பண்ணியநூல் ஒன்பதோ டாமே
நெறியார் விளக்கம் அவைக்கு.

9. உடையவர் ஆயிரம் நன்றுநமக் கானதும் 
கோடை வெயிலுக்கோர் குன்றருவி -- ஓடை
எனவந்த வள்ளல் இராமா நுசனவன் 
ஞானக்கை ஒல்க உயர்வு !

10. பூமுடியும் பொன்வடமும் பாங்கான தோளிரண்டில் 
 தூமலர் தாழ்சரமும் புத்தாடை -- தாமணிந்த 

போகப் புதுக்கணிப்பும் நம்மிரா மானுசா!
ஏகமெண்ணும் என்றன் மனம்.

முக்தாயம்:


ஏழைஎம் சொல்ஏறும் கொல்?கிளி தாவிய 
வாழைசேர் சோலை அரங்கன் -- புழல்வாவி 
முற்றத்துக் கொவ்வைவாய் கோகிலங்கள் இன்சொல்ஆழ்ந் 
துற்ற எதிதன் செவிக்கு?

இரும்நாள் நமக்கு உலகிதில் இன்பம் 
தரும்திருமால் பக்கல் சலியா -- புலன்வாய் 
வலம்தரும் தன்னடிசேர்த் தொல்லை எதிராசார் 
நலம்தரும் நாமம் புலர்த்து.

-- (அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .

திருவஞ்சிக்களம் :

திருவஞ்சிக்களம் : இருள்தருமா ஞாலத்து இகலொழித்தல் வேண்டுவயேல் மருளொழித்து மடநெஞ்சே வஞ்சிக் களத்துறையும் அருளாழி வண்ணர் கண்ணன் நம்பெருமான...